எரிவாயு, நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயரக்கூடும்: ஆனந்த பாலித எச்சரிக்கை

உள்நாட்டு எல்.பி எரிவாயு (LP gas), நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய எரிசக்தி மற்றும் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் அழைப்பாளருமான ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.

‘ பாலித, இந்த வார இறுதிக்குள் எல்.பி எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 300 ரூபாய்க்கும் அதிகமாக உயரக்கூடும் என்றும், ஜூன் 15 ஆம் திகதிக்குள் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, எல்.பி எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 500 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.

தரம் குறைந்த நிலக்கரி இருப்புக்களை இறக்குமதி செய்தமை மற்றும் நாட்டிலிருந்து தேவையற்ற முறையில் வெளிநாட்டு நாணயம் வெளியேறியமை ஆகியவற்றுடன் இந்த எதிர்பார்க்கப்படும் விலை உயர்வுகள் தொடர்புடையவை என்று பாலித குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திண்டாடிக் கொண்டிருக்கும் நுகர்வோர் மீது, இந்த கூடுதல் செலவுகள் மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், எல்.பி எரிவாயு விலைகள், நீர் கட்டணங்கள் அல்லது மின்சாரக் கட்டண திருத்தங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shira11
சீனா அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாக கிடைத்த எம். ஆர். ஐ ஸ்கேனர் இயந்திரம் சிராந்தியின் பிள்ளையின் பிறந்த நாளன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது – நீதிமன்றில் தகவல்
Nalinda Jayatissa Cabinet Meet-790605
சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் - சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த
shira1
சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?
Navi Pillay York University (5)
நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம்
police11
வினோத உடைப் போட்டியில்செம்மணியில் புதையுண்ட சிறுவனாக தோன்றிய மாணவன் - பெற்றோர் பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு
sajith 5
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை - இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் - சஜித்
imf4
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறல் என்ன?
psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
shiranthi are
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?