மத்திய இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல் எனச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, பலர் காயம்

CNN

மத்திய இஸ்ரேல், ஜூன் 7 (2026) – மத்திய இஸ்ரேலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக முதலுதவி மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைப் பகுதியான (Green Line) ‘கொச்சாவ் யாயிர்’ (Kochav Yair) என்ற நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் ‘மகன் டேவிட் அடோம்’ (MDA) அவசர மருத்துவ சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், குறைந்தது மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த இத்தாக்குதல்களில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எம்கேஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சந்தேகநபர் சுட்டுக்கொலை

இத்துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகனம் ஒன்றை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர் ஒருவரைத் தாங்கள் “செயலிழக்கச் செய்துள்ளதாக” (Neutralized) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் பொதுவாக சந்தேகநபரைக் சுட்டுக் கொன்றதைக் குறிக்கவே “செயலிழக்கச் செய்தல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இத்தாக்குதலில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தாக்குதலை நடத்திய சந்தேகநபர், கொச்சாவ் யாயிர் நகருக்கு வடக்கே அமைந்துள்ள அரபு நகரான ‘தயீபே’ (Tayibe) பகுதியைச் சேர்ந்த ஓர் இஸ்ரேலிய குடிமகன் என்று இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்த அவசர ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியதாக அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich), இஸ்ரேலில் வாழும் அரபு குடிமக்கள் மத்தியில் “ஆழமான மாற்றம்” கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அந்த சமூகத்தினரிடம் உள்ள சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

“இதற்கான தீர்வு மிகவும் எளிதானது: நாட்டின் இறையாண்மையை ஏற்றுக்கொள்பவர்கள் எவரும் இங்கே நிம்மதியாக வாழலாம். ஆனால், பயங்கரவாதப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் தங்கள் சொந்த அழிவுக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.” என்று ஸ்மோட்ரிச் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், ஹமாஸ் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது. “காசா மீது ஆக்கிரமிப்புப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், மேற்கு கரை மற்றும் ஜெருசலேமில் உள்ள எங்கள் மக்கள் மீது தினசரி நடத்தப்படும் அத்துமீறல்களுக்கும் பதிலடியாகவே” இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ஹமாஸ் உரிமை கோரியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி