எல் நினோ தாக்கம் தீவிரமடைந்தது: கடும் வறட்சியைத் தொடர்ந்து பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்கு அபாயம் — பொதுமக்களுக்குச் சுற்றுச்சூழல் அமைச்சு எச்சரிக்கை!

கொழும்பு, ஜூலை 23: உலகளாவிய ரீதியில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிலைமையானது தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளதாகவும், எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவாக, அதாவது எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அது இலங்கையில் உச்சக்கட்டத்தை அடையக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் இன்று (ஜூலை 23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இவ் ஆண்டின் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் கடும் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழல் அமைச்சரின் முக்கிய எச்சரிக்கை: “இது இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட பிரச்சினையல்ல; பூகோள ரீதியிலான ஒரு சுற்றுச்சூழல் சவாலாகும். இதனால் ஏற்படும் கடும் வறட்சியைக் கருத்திற் கொண்டு, பொதுமக்கள் நீர் மற்றும் மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எல் நினோ தாக்கத்தால் தொழிலிழப்புகள், பொருளாதாரப் பின்னடைவுகள் மற்றும் பொதுச்சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.”

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பு: இவ் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன;

முன்னர் பலவீனமாக இருந்த எல் நினோ நிலைமை தற்போது மிதமான கட்டத்தை அடைந்து வேகமாகத் தீவிரமடைந்து வருவதாகவும், இது ‘மிகவும் வலுவான’ (Very Strong) நிலையை அடையக்கூடும் என்றும் தெரிவித்தார்.

பொதுவாக 10 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய இக் காலநிலைக் மாற்றத்தின் காரணமாக, மேல், சபரகமுவா, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் அதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான காலநிலையும் வெப்பநிலை உயர்வும் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத இறுதியில் மிதமான மழையும், அக்டோபர் மாதம் முதல் கடுமையான மழையும் எதிர்பார்க்கப்படுவதுடன், ஆண்டின் இறுதி மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் (Flood Conditions) ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்