ஞானசார தேரரின் காவியுடை சிறைச்சாலைக்குள் முறையற்ற விதத்தில் களையப்படவில்லை- சிறைச்சாலைகள் அதிகாரி

சிறைச்சாலைக்குள் பொதுபலசேனாவின் ஞானசார தேரரின் காவியுடை முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் சிறைக்குள் அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான சேனக பலவத்த இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது
சிறைச்சாலை பணியாளர்களும் அதிகாரிகளும் சிறைச்சாலைகளை நிர்வகிக்கும் சட்டகட்டமைப்பிற்கு உட்பட்டே செயற்படுகின்றனர்.
சிறைச்சாலையில் உள்ள மததலைவர்களுக்கு எதிராக தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறைச்சாலைகளை நிர்வகிக்கும் சட்டகட்டமைப்பில் அவர்களுக்கு இடமில்லை.
முறையற்ற விதத்தில் பலவந்தமாக ஞானசாரதேரரின் காவியுடை அகற்றப்பட்டதாக எங்களுக்கு எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதகுருமாரின் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது,இந்த குழு விரைவில் தனது பரிந்துரைகளை முன்வைக்கும், அந்த குழுவின் பரிந்துரைகளை வெளிப்படை தன்மையுடன் நடைமுறைப்படுத்த முயல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
(ரி)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sajith 5
பௌத்தமதகுருமாரின் காவியுடையை தொடவேண்டாம் - பொலிஸாரின் நடவடிக்கை ஜனநாயகவிரோத செயல் ; என்கின்றார் சஜித்
Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன
MediaFile_20261015_120159_758
ஜனாதிபதி செயலகத்தின் அருகில் தற்காலிக கூடாரத்தை அமைத்து தங்கியியுள்ள பௌத்தமதகுருமார்
Screenshot_20261015_192923_YouTube
பேச்சுவார்த்தை தோல்வி- ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகிச்செல்வதற்கு பௌத்த மதகுருமார் மறுப்பு
கால்நடை உற்பத்தியை அதிகரித்து, பாலையும் இறைச்சியையும் பெறுமதிசேர் பொருட்களாக வடக்கிலேயே தயாரிக்க ஒத்துழைப்பு தேவை – ஆளுநர்
un human right off
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை நீக்கவேண்டும் - சட்டமூலத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் - ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்
missing protest
வடக்கு கிழக்குமுழுவதும் இராணுவமயமாக்கல் ஆழமாக வேரூன்றியுள்ளது- போர் முடிந்து 17 வருடங்கள் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன - இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
pak school
பாக்கிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 27 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
Sonali Jain-Chandra IMF-858917
இலங்கைக்கு அடுத்தது என்ன? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்