ஞானசார தேரரின் விடுதலையை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்தமதகுருமார் பொலிஸாரின் வேண்டுகோளை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள வீதிக்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு நேர் எதிராக உள்ள காலிவீதியின் நடைபாதையில் அவர்கள் காணப்படுகின்றனர்.
இதன் காரணமாக வீதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. சிறிய எண்ணிக்கையிலான பௌத்தமதகுருமாரே தற்போது அங்கு காணப்படுகின்றனர்.