பௌத்தமதகுருமாரின் காவியுடையை தொடவேண்டாம் – பொலிஸாரின் நடவடிக்கை ஜனநாயகவிரோத செயல் ; என்கின்றார் சஜித்

ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பொலிஸார் பௌத்தமதகுருமாருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் பௌத்தமதகுருமார் கண்டியிலிருந்து பாதயாத்திரையாக வந்து அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
பாதயாத்திரையின் போது பௌத்தமதகுருமார் கொண்டுவந்த புத்தரின் சிலைக்காக அவர்கள் அமைத்த தற்காலிக கூடாரத்தை பொலிஸார் அகற்றிவிட்டனர்என தகவல் கிடைத்துள்ளது.பலர் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.இது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பௌத்தமதகுருமாருக்கு எதிரான ஜனநாயக மீறல்.
பௌத்த மதகுருமாரின் ஆடைக்கு மதிப்பளிக்கும் அதேவேளை இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி நேரடியாக பௌத்தமதகுருமாருடன் பேசவேண்டும், அவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைளை பொலிஸார் கைவிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

HARINI JULY
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள்கள் - பிரதமர் தெரிவிப்பது என்ன?
Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன
MediaFile_20261015_120159_758
ஜனாதிபதி செயலகத்தின் அருகில் தற்காலிக கூடாரத்தை அமைத்து தங்கியியுள்ள பௌத்தமதகுருமார்
Screenshot_20261015_192923_YouTube
பேச்சுவார்த்தை தோல்வி- ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகிச்செல்வதற்கு பௌத்த மதகுருமார் மறுப்பு
கால்நடை உற்பத்தியை அதிகரித்து, பாலையும் இறைச்சியையும் பெறுமதிசேர் பொருட்களாக வடக்கிலேயே தயாரிக்க ஒத்துழைப்பு தேவை – ஆளுநர்
un human right off
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை நீக்கவேண்டும் - சட்டமூலத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் - ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்
missing protest
வடக்கு கிழக்குமுழுவதும் இராணுவமயமாக்கல் ஆழமாக வேரூன்றியுள்ளது- போர் முடிந்து 17 வருடங்கள் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன - இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
pak school
பாக்கிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 27 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
Sonali Jain-Chandra IMF-858917
இலங்கைக்கு அடுத்தது என்ன? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்