பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தன்னை சிறையில் அடைப்பதன் மூலம் பொதுமக்களின் பொருளாதார சுமை குறையும் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றால் தான் 500 நாட்கள் சிறையிலிருப்பதற்கும் தயார் என தெரிவித்துள்ளார்.
நாமல்ராஜபக்ச நீண்ட அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். சனிக்கிழமையுடன் தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 50 நாட்களாவதை சுட்டிக்காட்டியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எனது நாட்டிற்கு சிறந்த பலாபலன்கள் கிட்டும் என்றால் அதன் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றால் நான் 50 நாட்கள் என்ன 500 நாட்களும் சிறையில் இருக்க தயார்.
அரசாங்கம் நிதிநிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் மக்கள் தொடர்ந்தும் பல பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
மின்கட்டணத்தை குறைப்பது,எரிபொருள் விலையை குறைப்பது உட்பட பல வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கியிருந்தது.
ஒரு தனி அரசியல் குடும்பத்தை இலக்குவைப்பதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப முயல்கின்றனர்.
எனது தந்தை தொலைநோக்குள்ள ஒரு தலைவர் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாத்தவர்,மக்கள் பாதுகாப்பாக வாழும் நிலையை ஏற்படுத்தியவர்.அரசாங்கம் வனவிலங்குகளை கூட பாதுகாக்க தவறிவிட்டது,மதம் என்பது போட்டியல்ல அது ஒரு சகவாழ்வு
எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து என்னை நீதித்துறை விடுதலை செய்யும் என கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.