சிறைவாசம் அனுபவிக்கும் மததலைவர்கள் மத ஆடைகளை அணிய அனுபவிக்கும் புதிய விதிகள் – வர்த்தமானியில் வெளியிட்டது அரசாங்கம்

சிறைத்தண்டனை அல்லது விடுதலையின் போது பௌத்மதகுருமாரின் துறவற ஆடைகளை களைத்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்து சிறைச்சாலைதிணைக்களத்தின் நிலையியற் கட்டளைகளில் திருத்தங்களை செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
நீதியமைச்சரின் ஒப்புதலுடன் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர்நாயகம் ஆர் பிரசாந் ஹேமந்த குமார இந்த அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
புதிய திருத்தங்களின் படி குற்றவாளியாக அல்லது கைதியாக சிறையில் அடைக்கப்படும் எந்தவொரு பௌத்தமதகுருவினதும் காவியுடையை களைவதற்கு முன்னர் சிறைச்சாலைகள் திணைக்களம் பௌத்தவிவகாரங்கள் தொடர்பான திணைக்களத்துடன் கலந்தாலோசிக்கவேண்டும்.
பௌத்தவிவகாரங்களுக்கான திணைக்களம் அதன் பின்னர் சம்பந்தட்ட பௌத்தமதகுரு எந்த பீடத்தை சேர்ந்தவரோ அந்த பிரிவுக்கு அறிவிக்கும் .அந்த பிரிவு பத்து நாட்களுக்குள் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு தனது முடிவை அறிவிக்கவேண்டும்.
பத்து நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிரிவிடமிருந்து பதில் கிடைக்காத பட்சத்தில் சாதாரண விதிமுறைகளின் படி செயற்பட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்படும்போது அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது சம்பந்தப்பட்ட துறவறப்பிரிவு ஒப்புதலை இரத்து செய்யாத பட்சத்தில் பௌத்தமத குருமார் சிறைக்கு செல்லும்போது அணிந்திருந்த அதே ஆடைகளை அணிந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வர்த்தமானி தெரிவித்துள்ளது.
இந்த திருத்தப்பட்ட விதிகள் சிறைவாசம் அல்லது விடுதலையின் போது ஏனைய மதங்களை சேர்ந்த மதகுருமாருக்கும் பொருந்தும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
(ரி)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

batti mayi
மயிலத்தமடு விவகாரம் - ஜனாதிபதியை அவசரமாக சந்திப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம்
batti land
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல்தரை மீட்பிற்கான கலந்துரையாடல்
namal courts
பொதுமக்களின் பொருளாதார சுமை குறையும் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றால் 500 நாட்கள் சிறையிலிருக்கவும் தயார் – நாமல்
tear drop
இலங்கை எவ்வாறு போருக்குச் சென்றது? 2009 வரையிலான பாதையைத் தடமறியும் ' (Teardrop Nation)
IPKF1
இந்திய அமைதிப்படையின் கொக்குவில் இந்து படுகொலைகள் - 39 வருடங்கள்
parliment
"அரசாங்கம் 'வஸ்கவி'க்கு பயப்படுகிறது" – நாடாளுமன்றத்தில் பாடலைப் பாடி எதிரணி எம்.பி தயாசிறி சாடல்
b8966750-cef5-11f1-a701-fddedf244c16
வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த நபர் தனது கண்ணில் தென்பட்ட நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்- பிரான்ஸ் தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்
gnasaraa
ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை: உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை – கொழும்பு மேல் நீதிமன்றம்
rajeevan 5666
செம்மணி அகழ்வுப் பணியில் சந்தேகங்கள் எழக்கூடாது" – நீதி அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் கடிதம்!
16930815621492431198
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருமார் –நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்ன,?