கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்தமதகுருமதரை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக திங்கட்கிழமை நீதிமன்றில் மீண்டும் மனுதாக்கல்செய்யவுள்ளனர்.
பௌத்தமதகுருமார் தொடர்ந்தும் அங்கு காணப்படுவது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கலாம் என தெரிவித்தே பொலிஸார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளனர்.
விகாரமகாதேவி பூங்காவில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கொழும்பு மாநகரசபை அனுமதி வழங்கவில்லை,அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்மதகுருமார் பூங்காவை சுற்றி இடம்பெறும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளனர்.
அந்த பகுதியில் கத்தியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதையும் பொலிஸார் சுட்டிக்காட்டவுள்ளனர்.