பாட்டிக் எயார் – Nirupar

மார்ச்30 முதல் கொழும்பு – கோலாலம்பூர் இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது பாட்டிக் எயார் (Batik Air)
பாட்டிக் எயார் நிறுவனம் எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கோலாலம்பூர் இடையே வாரத்திற்கு நான்கு விமான சேவைகளை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையுடனான தனது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த நேரடி விமான சேவை மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் விமான போக்குவரத்து, சுற்றுலா மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னர் ‘மலிண்டோ எயார்’ (Malindo Air) என்ற பெயரில் இயங்கிய பாட்டிக் எயார் மீண்டும் வருகை தருவது, இலங்கைப் பயணிகளுக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான விரிவான வாய்ப்புகளை வழங்கும் என அதன் பொது விற்பனை முகவரான (GSA) M&C ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் விஜேசுந்தர தெரிவித்தார்.

இந்த விமான சேவை தென்கிழக்கு ஆசியா, வட ஆசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான இணைப்பை கோலாலம்பூர் ஊடாக வழங்கும். இது சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய சுற்றுலாத்துறை பணிப்பாளர் ஹிஷாமுதீன் முஸ்தபா கருத்து தெரிவிக்கையில், 2024ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து 61,766 சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்ததாகவும், 2025ஆம் ஆண்டில் அது 77,022 ஆக (24.7% வளர்ச்சி) அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 2026ஆம் ஆண்டை ‘மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு’ (Visit Malaysia Year) என அறிவித்துள்ள நிலையில், இந்த புதிய விமான சேவையின் மூலம் இலங்கை பயணிகளின் வருகையை மேலும் 10-15% அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புவெல்ல இந்த மீள்வருகையை வரவேற்றார். விமானப் போக்குவரத்தும் சுற்றுலாவும் “ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என அவர் வர்ணித்தார். அண்மைக்காலமாக பல விமான நிறுவனங்கள் இலங்கையில் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருவது நாட்டின் மீட்சி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.