ஹண்டாவைரஸ் (Hantavirus) பரவல் உள்ள நெதர்லாந்தின் எம்.வி. ஹொண்டியஸ் (MV Hondius) கப்பலைத் தங்கள் தீவுகளில் தரைதிறங்க அனுமதிக்கும் ஸ்பெயின் அரசாங்கத்தின் முடிவை, கேனரி தீவுகளின் (Canary Islands) அதிபர் பெர்னாண்டோ கிளாவிஜோ நிராகரித்துள்ளார்.
“அந்தக் கப்பலை கேனரி தீவுகளுக்குள் நுழைய நான் அனுமதிக்க முடியாது,” என்று கிளாவிஜோ ‘ஒண்டா செரோ’ (Onda Cero) வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த முடிவு எந்தவொரு தொழில்நுட்ப ரீதியான அளவுகோல்களின் அடிப்படையிலும் எடுக்கப்படவில்லை, மேலும் இது குறித்த போதுமான தகவல்களும் எங்களுக்கு வழங்கப்படவில்லை,” என்று வருத்தம் தெரிவித்தார்.
தற்போது பிரஸ்ஸல்ஸில் இருக்கும் கிளாவிஜோ, இது குறித்து விவாதிப்பதற்காக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை மாட்ரிட்டில் அவசரமாகச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல் இன்னும் சில நாட்களில் கேனரி தீவுகளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
