மத்திய கிழக்கில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இஸ்ரேலிய வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காகச் இலங்கை தொழிலாளர்கள் இஸ்ரேல் செல்வது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இஸ்ரேலில் தாதியர் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 47 தொழிலாளர்கள் இன்று காலை எட்டிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான EY 593 விமானம் மூலம் நாட்டிலிருந்து புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
42 பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை உள்ளடக்கிய இந்த குழு, இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் 2022-வது தொகுதியாகும்.
வெளியேற்ற நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய பின்னர் அவர்களின் நல்வாழ்வு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளை பணியகம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கூறினார்.
மேலும், தொழிலாளர்கள் தங்கள் கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றவும், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும், வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை முறையாகப் பயன்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.
இலங்கை கடந்த 2025-ஆம் ஆண்டில் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு வருவாயாக 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டில் அந்தத் தொகையை மேலும் அதிகரிக்க முடியும் என தாம் நம்புவதாகவும் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
