இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 215,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் தரவுகளின்படி, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் மோட்டார் சைக்கிள்களே அதிக பங்கைக் கொண்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கை 144,000-க்கும் அதிகமாகும்.
அதே காலப்பகுதியில் 45,000-க்கும் மேற்பட்ட கார்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு 195.95 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
