பிலிப்பைன்ஸ் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் தனது பசிபிக் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை (tsunami advisory) விடுத்துள்ளது. அலைகள் எழக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
‘இப்போதே உயரமான பகுதிக்குச் செல்லுங்கள். தாமதிக்க வேண்டாம்’ – ஜனாதிபதி மார்கோஸ்
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்கோஸ் வெளியிட்டுள்ள. மிண்டானாவோ (Mindanao) மாகாணத்தின் பல கடலோரப் பகுதிகளில் தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள நமது நாட்டு மக்களே (kababayans), தயவுசெய்து இந்தச் சுனாமி எச்சரிக்கையைக் தீவிரமாகக் கவனத்தில் கொள்ளுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
“இப்போதே உயரமான இடங்களுக்குச் செல்லுங்கள். தாமதிக்க வேண்டாம். நீங்கள் விட்டுச் செல்லும் எதையும் விட உங்கள் உயிரே மிக முக்கியமானது.”
உள்ளூர் அதிகாரிகளுடன் தாம் “தொடர்ந்து தொடர்பில்” இருப்பதாகவும், சூழ்நிலைக்கேற்ப அடுத்தடுத்த தகவல்களை வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது, மிண்டானாவோவை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜப்பான் பிரதமர் தகாஇச்சி: வெளியேற்ற எச்சரிக்கைகளைப் பின்பற்றுங்கள்
ஜப்பானிய மக்கள் உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும், அவ்வாறு அறிவுறுத்தப்பட்டால் உடனடியாக உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறும் ஜப்பான் பிரதமர் சனாயே தகாஇச்சி (Sanae Takaichi) அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
