இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவிஇயற்பியல் முகமையின் (BMKG) தகவல்படி, அந்நாட்டின் கடலோரப் பகுதிகளில் மூன்று இடங்களில் சுனாமி அலைகள்தென்பட்டுள்ளன
வடக்கு மலுகு (North Maluku) மாகாணத்தில் உள்ள கெடி (Kedi), உலு சியாவ் (Ulu Siau) மற்றும் மெலோங்குவானே (Melonguane) ஆகியவையே அந்த மூன்று இடங்கள் ஆகும். அங்கு கண்டறியப்பட்ட அலைகளின் உயரம் 0.09 மீட்டர் முதல் 0.19 மீட்டர் வரை பதிவாகியுள்ளது.
BMKG அமைப்பின் கூற்றுப்படி, இந்த அலைகள் உள்ளூர் நேரப்படி காலை 7:20 மணிக்கு (மத்திய கிரீன்விச் நேரம் 12:20 GMT) தென்பட்டுள்ளன
