அமெரிக்கப் பங்குச் சந்தை தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், சிப் (chip) தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்வடைந்ததன் காரணமாக, S&P 500 மற்றும் நாஸ்டாக் (Nasdaq) ஆகிய இரண்டுமே சற்று உயர்வைக் கண்டுள்ளன.
S&P 500 குறியீடு 8.9 புள்ளிகள் (சுமார் 0.12%) உயர்ந்து 7,491.6 புள்ளிகளாகத் தொடங்கிய வேளையில், நாஸ்டாக் கூட்டுக்குறியீடு (Nasdaq Composite) 47.7 புள்ளிகள் அல்லது 0.18% உயர்வடைந்தது.
இருப்பினும், டவ் ஜோன்ஸ் (Dow Jones) தொழிற்துறை சராசரி குறியீடு 98.9 புள்ளிகள் அல்லது 0.19% சரிந்து 52,249.44 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பாரசீக வளைகுடாவில் (Persian Gulf) அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே இடம்பெற்ற ‘பழிக்குப்பழி’ தாக்குதல்களைத் தொடர்ந்து, மீண்டும் மோதல்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தை சிப் பங்குகளின் விலை உயர்வு ஈடுசெய்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர்நிறுத்தம் “முடிவுக்கு வந்துவிட்டது” என்று டிரம்ப் நேற்று கூறியிருந்த போதிலும், முழு அளவிலான ஒரு போர் மீண்டும் தொடங்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் தொடரக்கூடும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.