சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?

சர்வதேச நாணயநிதியத்தின் தற்போதைய திட்டம் முடிவடைந்த பின்னர் மற்றுமொரு திட்டத்தில் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை நிராகரிக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க எனினும் அரசாங்கம் இது தொடர்பில் இன்னமும் இறுதி தீர்மானத்தை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலொன்றில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது.
சர்வதேச நாணயநிதியத்தின் தற்போதைய திட்டம் மூலம் சாத்தியமான பொருளாதார ஸ்திரதன்மையை தொடர்ந்துபேணும் அதேவேளை பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்துடன் புதிய உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.
பொருளாதார ஸ்திரதன்மையை உருவாக்குவதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை பெற்றுள்ளது எனினும் வெளிநாட்டு நாணய கையிருப்பு இன்னமும் எதிர்பார்க்கப்படும் அளவை எட்டவேண்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதிலேயே சர்வதேச நாணயநிதியத்தின் தற்போதைய திட்டம் அதிகளவு கவனம் செலுத்தியது அடுத்த கட்டம் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தவேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளுக்கு ஆதவளிக்கும் வகையில் ஒரு புரிதலை எட்ட முடிந்தால் சர்வதேச நாணயநிதியத்துடன் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசாங்கம் தயாராக உள்ளது.
சர்வதேச நாணயநிதியத்துடனான ஒப்பந்தம் எந்த வடிவத்தை பெறவேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
எனினும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து முற்றாகவிலகவோ அல்லது புதிய திட்டத்திற்கு அர்ப்பணிக்கவோ அரசாங்கம் முற்றாக தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

court-judge-hammer-gavel-696x398
அனுரகுமாரவின் மனைவி என்றால் பொலிஸார் இப்படி செயற்பட்டிருப்பார்களா? நீதிமன்றத்தில் சிராந்தி சட்டத்தரணி
gnasaraa
ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு
Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை