குற்றமிழைத்த தனிநபர்களை தண்டிக்கலாம் காவியுடையை தண்டிக்ககூடாது என விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லால்காந்த இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது
காவியுடையை தண்டிப்பதை நான் தனிப்பட்ட ரீதியில் விரும்புவதில்லை,காலனித்து ஆட்சிக்காலத்தில் கூட காவியுடை தண்டிக்கப்பட்டது.காவியுடை அணிந்த எங்கள் பௌத்தமதகுருமார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நான் இதனை விரும்பவில்லை.தனிநபர் ஒருவர் தவறிழைத்தார் என்பதற்காக காவியுடையே குற்றமல்ல.
சட்டத்தின்படி நபரை தண்டிப்பது நியாயமானது ஆனால் காவியுடையை தண்டிப்பது நியாயமற்றது.
ஞானசார தேரர் எனது நண்பர் ஆனால் சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று உள்ளது அதனை நாங்கள் உருவாக்கவில்லை,ஆனால் ஞானசாரதேரரின் நிலைமைக்கு அது காரணமல்ல,அவர் இதற்கு முன்னரும் சிறை சென்றிருக்கின்றார், இது முதல்தடவையில்லை.
63 பௌத்தமதகுருமார் சிறையில் உள்ளனர் ஏன் அவர்களின் நிலை குறித்து சர்ச்சைகள் உருவாகவில்லை.
ஞானசாரதேரர் நேர்மையானவர் அவரை பல குழுக்கள் பயன்படுத்தின அவருக்கு இது தெரியும்,இன்றும் அவர் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றார்.சிறையில் உள்ள ஏனைய 63 பௌத்தபிக்குகளையும் அரசியலுக்கு பயன்படுத்த முடியாது என்பதால் அவர்களை பற்றி எவரும் பேசுவதில்லை.
சில குழுக்கள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக ஞானசாரதேரரை பயன்படுத்துகின்றன.இனமத பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.