ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பாதயாத்திரையாக கண்டியிலிருந்து கொழும்பை வந்தடைந்துள்ள பௌத்தமதகுருமார் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் பெருமளவில் திரண்டுள்ளதுடன் அங்கிருந்து விலகிச்செல்ல மறுத்துவருகின்றனர்.
ஞானசார தேரரை விடுதலை செய்வதாக அறிவிப்பு வெளியாகும் வரை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பௌத்தமதகுருமார் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் சற்று முன்னர் அவர்களை சந்தித்திருந்தார் , ஞானசார தேரரின் விடுதலை குறித்து தீர்மானிப்பதற்கு ஒரு மாதமாவது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்தனர் என பௌத்தமதகுருமார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள பௌத்தமதகுருமார் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.