ஞானசார தேரரின் விடுதலையை கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்தமதகுரு கஸ்ஸப்ப தேரர் தாக்கப்பட்டார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பொலிஸார் இதனை மறுத்துள்ளனர்.
விகாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று பதற்றமான சூழ்நிலை உருவானது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பொலிஸார் தேரரை தாக்கினார்கள் என தெரிவித்துள்ளனர்.
அவர் அம்புலன்சில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் பொலிஸார் இதனை நிராகரித்துள்ளனர்.