கபில சந்திரசேனவின் பிணை விவகாரம்: தரகராகச் செயற்பட்டவர் கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவுக்கு, பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற இருவருக்கும் இடையில் தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசல்கவத்தை பொலிஸாரால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு, போலியான தகவல்களை வழங்கி பிணை நிற்க முயன்ற குற்றச்சாட்டில் கடந்த மே 07 ஆம் திகதி இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, தலா 15,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டே இவர்கள் இருவரும் பிணை நின்றதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன், இந்தச் சந்தேக நபர்களுக்கு நிலையான தொழில் அல்லது வருமான ஆதாரம் இல்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

குறித்த சந்தேக நபர்களுக்கு கபில சந்திரசேனவை நேரில் தெரியாது என்பதும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்தே, மே 13 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதவான் லஹிரு சில்வா, பிணை விண்ணப்பத்திற்காக கிராம நிலதாரி சான்றிதழ்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பிணை நடைமுறையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான சூழல் குறித்து நீதிமன்ற அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கெசல்கவத்தை பொலிஸார் இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யுமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

இருப்பினும், கடந்த மே 08 ஆம் திகதி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

கபில சந்திரசேனவின் இந்தச் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளன

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்