பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் ஹந்துன்னெத்தியை சந்திப்பு: ‘பூச்சிய-வரி’ திட்டத்தின் மூலம் இலங்கை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்

கொழும்பு, ஜூன் 18 — பிரித்தானியாவின் வர்த்தகத் தூதுவர் லோர்ட் ஹனெட் (Lord Hannett of Everton) மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) ஆகியோர், இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியைச் சந்தித்து, இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவல்படி, பிரித்தானியாவின் வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (Developing Countries Trading Scheme – DCTS) கீழ், இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்படும் ‘பூச்சிய-வரி’ (Zero-tariff) அணுகல் வாய்ப்புகளை இன்னும் வலுவான முறையில் பயன்படுத்துவது குறித்தே இக்கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், நீண்டகால பொருளாதாரக் கூட்டாண்மையை வளர்ப்பதற்கும், வெளிப்படையான மற்றும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய வணிகச் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பின் போது இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது