மலேசியாவில் இலங்கை பெண்ணை கட்டாயமாக தொழில் ஈடுபடுத்திய- பாலியல் சுரண்டலிற்கு ஈடுபடுத்திய குற்றச்சாட்டு – இலங்கையர் ஒருவர் கைது

கோலாலம்பூர், ஜூலை 22: மலேசியாவின் சிலாங்கூர் (Selangor) மாநிலத்தின் ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில்  இலங்கை பெண் ஒருவரைக் பலவந்தமாக தொழிலில் ஈடுபடுத்தியபாலியல் மற்றும் உடல் ரீதியான சுரண்டல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய இலங்கை முதலாளி ஒருவர் அந்நாட்டு குடிவரவுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில், ஜெஞ்சாரோம் பகுதியில் அமைந்துள்ள மூன்று இடங்களில் மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் கடத்தல் தடுப்புப் பிரிவு (ATIPSOM) அதிகாரிகள் விசேட சோதனைகளை நடத்தினர்.

Sri Lankan employer arrested in Malaysia for exploiting fellow countrymen as forced laborers

இச்சோதனை நடவடிக்கையின் போது, கட்டாயத் தொழிலாளியாகப் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இலங்கை பெண் ஒருவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தாதுக் ஜக்காரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“வேலைவாய்ப்பு மற்றும் வேலை அனுமதிப் பத்திரம் (Work Permit) பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டே குறித்த பெண் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர் சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் அவர் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை:

  • ஊதியம் வழங்கப்படாமல் கட்டாய வேலை வாங்கப்பட்டமை.

  • போதுமான உணவு வழங்கப்படாமை மற்றும் நடமாட்டங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டமை.

  • அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தலாக உடல் ரீதியான வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டமை.

கூடுதல் கைதுகள்: இச்சோதனை நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது விசா அற்ற முறையில் தங்கியிருந்த 21 முதல் 51 வயதுக்குட்பட்ட மேலும் 6 இலங்கையர்கள் (4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியக் குடிமகனைத் திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால சமூக விஜயப் விசா (Long-Term Social Visit Pass) வைத்துள்ள 38 வயதுடைய பிரதான சந்தேகநபருக்கு எதிராக, மலேசிய ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்