நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம்

ஹரிணி சிவலிங்கம்

Tamil guardian

 

இந்த வாரம் உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கை பயணத்தை வரையறுத்த நவி பிள்ளைக்கு அமைதிக்கா நோபல் பரிசு வழங்கப்பட்டதை உலகம் கொண்டாடியது.
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் நெல்சன் மண்டேலா உட்பட ரொபன் தீவிலிருந்த அரசியல் கைதிகளின் உரிமைகளை பாதுகாத்து பெற்றுதந்ததது முதல் ,ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் உயர்ஸ்தானிகராகவும்,சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஏனைய சர்வதேச நீதிமன்றங்களில் அமைப்புகளில் நீதிபதியாக பணியாற்றியது முதல் நவி தனது வாழ்க்கையை மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணித்தவர்.

Navi Pillay delivers the N. Sivalingam Memorial Lecture
அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை பயணத்தை பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது,தமிழ் சமூகம், ஒரு தலைமுறை சட்ட அறிஞர்கள்,வழக்கறிஞர்கள்,ஆர்வலர்கள்,மற்றும் எனது சொந்த வாழ்க்கையில் நவிபிள்ளை ஏற்படுத்திய தாக்கத்தை நான் இங்கே பகிர்ந்துகொள்ள முயல்கின்றேன்.
2009 மார்ச்சில் ஜெனீவாவில் நவிபிள்ளை மனித உரிமை ஆணையாளராகயிருந்தபோது நானும் எனது கணவரும் முதன்முதலில் அவரை சந்தித்தோம்.சிலமாதங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு இலங்கையில் நிகழ்ந்துகொண்டிருந்த கொடுரங்கள் எனது மனதை வெகுவாக பாரமாக்கிக்கொண்டிருந்த நிலையில் சந்திப்பொன்றை கோரி அவரது அலுவலகத்திற்கு கடிதமொன்றை எழுதியிருந்தேன்.

எமது தாயகத்தில் சுழன்றடிக்கும் மோசமடைந்து வரும் மனித உரிமை சூழ்நிலை குறித்து கவலையடைந்த புலம்பெயர் சட்டத்தரணிகள்,மற்றும் ஆர்வலர் குழுக்களுடனான சந்திப்பின் பின்னர் அவரது அலுவலகம் எம்மை தொடர்புகொண்டது , நான் அனுப்பிய கடிதம் குறித்து நான் கிட்டத்தட்ட மறந்துபோயிருந்தேன்.
நாங்கள் எங்கள் ஐந்து மாத குழந்தையுடன் ஜெனீவாவிற்கு பயணம் செய்தோம் . அந்த பயணம் எங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்திருந்தது.
அன்றிலிருந்து இரண்டு விடயங்கள் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டன,முதலாது மனித உரிமைகள் மற்றும் நீதி மீதான நவிபிள்ளையின் உண்மையான அர்ப்பணிப்பு.
முன்னதாக ஒரு சட்டப்பயிற்சி மாணவியாக சர்வதேச மனித உரிமை நிறுவனங்களை கவனிப்பதற்காக ஜெனீவாவில் கவனம் செலுத்திய நான்,அவர்களி;;ன் அதிகாரத்து அமைப்பு மற்றும் சட்ட கட்டுப்பாடு குறித்து கடும் அதிருப்தியடைந்திருந்தேன்.நவிபிள்ளையை சந்தித்தது அந்த விரக்தியை போக்கியது.

Navi Pillay at the N. Sivalingam Memorial Lecture
நீதிக்கான அர்ப்பணிப்பு என்பது வெறும் அர்ப்பணிப்பு சார்ந்ததாகயில்லாமல், கொள்கை பிடிப்புள்ள வாழ்க்கை நடவடிக்கைளில் அடித்தளமிட்ட ஒருவரை நான் அங்குதான் கண்டேன்.
அரசியல் மயப்படுத்தப்பட்ட சர்வதேச நிறுவனங்களுக்குள் கூட மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.
இரண்டாவது எங்களது சந்திப்பின் முடிவில் அவர் கூறிய ஒரு கருத்து. தமிழ் சமூகமும் புலம்பெயர் தமிழர்களும் மனித உரிமை வழிமுறைகளுடன் ஈடுபடுவதன் மூலம் மனித உரிமைக்கான தங்கள் போராட்டத்தை பெருமளவிற்கு அறிவுசார் படுத்தவில்லை என்ற அவதானத்தை அவர் முன்வைத்தார்.

அவரது வார்த்தைகள் பல ஆண்டுகளாக என்னுடன் இருந்து வருகின்றன.
தாயகத்திலும்,புலம்பெயர் தேசமெங்கிலும் உள்ள தலைமுறை தலைமுறையான தமிழர்களால் தயாரிக்கப்பட்ட கணிசமான ஆராய்ச்சி பணிகள்,ஆராய்ச்சிகளை நிராகரிப்பதாக அது அமையவில்லை.மாறாக இதனை ஒரு சவாலாகவே நான் புரிந்துகொண்டேன்.
எமது அறிவுசார் மரபுகளை வளர்ப்பது,கல்வித்துறையுடனான எமது ஈடுபாட்டை வலுப்படுத்துவது,எமது அனுபவவங்களையும் நீதிக்கான கோரிக்கைகளையும் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது,மற்றும் புதிய தலைமுறை தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டுவது ஆகியவையே அந்த சவாலாகும்.
முள்ளிவாய்;க்கால் இனப்படுகொலையில் உச்சமடைந்த,தமிழ் மக்களுக்கு எதிராக பல வருடங்களாக நடத்தப்பட்ட கொடுரங்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் இலங்கையின் தோல்விகளை நவிபிள்ளை தொடர்ந்தும் கேள்விக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

நீதியை பின்தொடர்வது என்பது கொடுரங்களை ஆவணப்படுத்துவதற்கும் அப்பால்,பொறுப்புக்கூறலைகோருவதற்கும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு எதிராக நிற்பதாகவும் அமையவேண்டும் என்பதை அவரது பணிகள் நிரூபித்துள்ளன.
அந்த சவால் முதுகலை ஆய்வுகளை தொடர்வதற்கான எனது சொந்த முடிவை எடுக்க தூண்டியது.தமிழ் உரிமைகளின் பாதுகாப்பு,தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள்,மற்றும் தமிழ் ஆய்வுகளின் வளர்ச்சிக்கு தேவையான அறிவுசார் ஈடுபாடும் வலுவான நிறுவனங்களும் அவசியம் என்ற நம்பிக்கையையும் அது வலுப்படுத்தியது.

எனது மறைந்த தந்தையின் நினைவாக யார்க் பல்கலைகழகத்தில் என் சிவலிங்கம் ஆய்வு விருதை எங்களது குடும்பம் நிறுவியது. மேலும் இரண்டாவது நினைவுச்சொற்பொழிவை ஆற்றுவதற்கு நவிபிள்ளைக்கு அழைப்பு விடுத்தோம்.
ஓஸ்கூடல் ஹோல் சட்டக்கல்லூரிக்கு அவரை வரவேற்பதற்கும் டொரண்டோ மற்றும் ஒட்டாவா விஜயங்களின் போது அவருடன் பணியாற்றுவதற்குமான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.வளர்ந்து வரும் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான அவர் உத்வேகம் அளிப்பதை கண்டேன்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shira1
சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?
police11
வினோத உடைப் போட்டியில்செம்மணியில் புதையுண்ட சிறுவனாக தோன்றிய மாணவன் - பெற்றோர் பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு
sajith 5
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை - இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் - சஜித்
imf4
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறல் என்ன?
psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
shiranthi are
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?
court-judge-hammer-gavel-696x398
அனுரகுமாரவின் மனைவி என்றால் பொலிஸார் இப்படி செயற்பட்டிருப்பார்களா? நீதிமன்றத்தில் சிராந்தி சட்டத்தரணி
gnasaraa
ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு
Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி