சீனா அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாக கிடைத்த எம்.ஆர்.ஐ ஸ்கேனர் முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்சவின் பிள்ளையின் பிறந்தநாளன்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
சிரிலியசவிய அமைப்பே இந்த ஸ்காகனரை நன்கொடையாக வழங்கியது,மருத்துவமனையின் மருத்துவர்கள் அது சீனாவின் நன்கொடை என்பதை உறுதிசெய்யும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்
முதன்முறையாக நிதியியல் குற்றபுலனாய்வு பிரிவும்,இலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு பரஸ்பர சம்மதத்துடன் இணைந்த முறையில் இந்த விசாரணையை நடத்திவருகின்றன,
2010 டிசம்பர் 28ம் திகதி இரண்டாவது சந்தேகநபர் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்ச என்ற கடிதத்தலைப்பை பயன்படுத்தி கார்ல்டன் சுவ உதான என்ற திட்டத்திற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 140 மில்லியனை கோரினார் பின்னர் வாய்மொழிமூலம் இது 50 மில்லியனாக மாறியது.
இந்த நிதியத்திற்கு தேசிய லொத்தர் சபை,ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் செலான் வங்கி போன்றவையும் நிதியை வழங்கின அவற்றிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
2010 டிசம்பர் 8ம் திகதி முதலாவது சந்தேகநபர் இது குறித்து கலந்துரையாடினார்,அவ்வேளை பத்து மில்லியன் வணங்குவதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டது, டிசம்பர் 30 ம் திகதி இந்த தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
2011 மே நான்காம் திகதி இரண்டாவது சந்தேகநபர் கார்ல்டன் சுவ உதானவின் வங்கி கணக்கிற்கு பதில் இலங்கை வங்கியின் மருதானை கிளையில் உள்ள சிரிலிய சவியவின் வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.எனினும் பணிப்பாளர் சபையினர் இதற்கான அனுமதியை வழங்கவில்லை.எனினும் முதலாவது சந்தேகநபர் முதல்பெண்மணியின் வேண்டுகோள் என தெரிவித்து அந்த பணத்தை சிரிலிய சவியவின் வங்கி கணக்கிற்கு மாற்றினார்.
2014இல் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை சீனா அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாக எம்ஆர்ஐ ஸ்கேனரை நன்கொடையாக பெற்றது.சீனா அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் கடனை கோரியபோது ஸ்கேனரையும் கோரியுள்ளது, ஸ்கானரிற்கான பெறுமதியை கடன்தொகையில் கழிக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
சீனா அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஸ்கானரை சிறிலிய சவிய அமைப்பு பின்னர் நன்கொடையாக அந்த மருத்துவமனைக்கு வழங்கியது.முதலாவது சந்தேகநபரும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இரண்டாவது சந்தேகநபரின் பிள்ளையின் பிறந்தநாளன்று இதனை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
மேலும் வைத்தியசாலையில் அவ்வேளை ஒரு சிடி ஸ்கேனர் இயந்திரம் இருந்தது.
இந்த வங்கி கணக்கு முதன்முதலில் 2006ம் ஆண்டு சிராந்தி நவோதய என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது,மூன்று மாதங்களின் பின்னர் இதன் பெயர் சிரிலிய சவிய என மாற்றப்பட்டது.
இந்த அமைப்பு முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை,எனினும் அரச இலச்சினை பயன்படுத்தப்பட்டது,அரசநிறுவனம் போல ஜனாதிபதி செயலகம் பயன்படுத்தப்பட்டது.சிராந்தி ராஜபக்ச முதல்பெண்மணி என்ற கடிதத்தலைப்பு பயன்படுத்தப்பட்டது.
அரசஇலச்சினையை பயன்படுத்துவதற்கு ஒருவர் அரசபதவியை வகிக்கவேண்டும்.
இந்த சிரிலிய சவிய அமைப்பு கருப்புபணத்தை கையாள்வதற்காக பயன்படுத்தப்பட்ட அமைப்பு,இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.