குற்றச்செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமார் தொடர்ந்தும் காவியுடையை அணிந்திருக்கவேண்டுமா என்ற தீர்மானத்தை அவர்களின் பௌத்தமத பீடங்களே தீர்மானிக்கவேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகள் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
இது குறித்த தீர்மானத்தை எடுக்கும்போது குறிப்பிட்ட பௌத்தபீடங்களின் மகாநாயக்கர்களுடன் கலந்துரையாடும் நடைமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலை காணப்பட்டால்,குறிப்பிட்ட பௌத்தமதபீடத்திற்கு இது குறித்து அறிவிப்போம்,பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் மூலம் பௌத்தபீடாதிபதிகளிடம் இதுகுறித்த ஆலோசனைகளை பெறுவோம்.
இதேவேளை ஞானசாரதேரரின் காவியுடை சிறைச்சாலைக்குள் களையப்பட்டவேளை
ஞானசார தேரரின் ஆடை களையப்பட்டவேளை பொலிஸ் உத்தியோகத்தர் அதனை தனது கையடக்கதொலைபேசியில் பதிவு செய்து சிரேஸ்ட அதிகாரியொருவர் அதனை பார்வையிடுவதற்கு உதவினார் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளமை பாரதூரமான விடயம்.இதனை சாதாரணமாக எடுத்துவிட முடியாது.
சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தவுடன் இது குறித்து விசாரணை இடம்பெறும்,இது குறித்து விசாரணை இடம்பெறும்,உதயகம்மன்பில இது தொடர்பில் தான் அறிந்த அனைத்து விபரங்களையும் வெளியிடவேண்டும் என எதிர்பார்க்கப்படுவார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்