முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்,தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பதை மாத்திரம் என்னால் கூற முடியும்.அவரது அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பை மதிக்கவேண்டிய கடமை எனக்குள்ளது இதனால் இந்த விபரத்தினை மாத்திரம் தற்போதைக்கு தெரிவிக்க முடியும்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்த விபரங்களை மருத்துவநிபுணர்களே தெரிவிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.