பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் வேண்டாம் – மக்களை பாதுகாக்கும் சட்டமூலத்தை கொண்டுவாருங்கள் -அருட்தந்தை சக்திவேல்

அரசாங்கம் மக்கள் பலத்துடன் விளையாட முயலக்கூடாது என தெரிவித்துள்ள அருட்தந்தை சக்திவேல் அரசாங்கம் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு பதில் மக்களை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தற்போதைய அரசாங்கத்தின் அனுரகுமாரதிசநாயக்க அமெரிக்க ஜனாதிபதியின் தம்பி போல நடந்துகொள்கின்றார் அதேபோல ரணிலின் அண்ணா போல நடந்துகொள்கின்றார்.
ஒடுக்குமுறை சட்டங்களை கொண்டுவந்து அனைத்து மக்களையும் நசுக்குவதற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு நாங்கள் கோரினோம்.
தேர்தல் வாக்குறுதியில் பயங்கரவாத தடைச்சட்டம் மாத்திரமல்ல அதுபோன்ற எந்த சட்டமும் கொண்டுவரப்படாது என தெரிவித்தனர்.
ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தான சட்டத்தை கொண்டுவரமுயல்கின்றனர்.தங்களிடம் 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்து அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்கின்றனர்.
ஆனாலும் மக்களின் பலத்தினால் இதனை தோற்கடிக்க நாங்கள் தயாராகயிருக்கின்றோம்.இந்த ஒடுக்குமுறை அரசாங்கத்தினால் இதனை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது.
எக்காலத்திலும் மக்களின் பலத்துடன் விளையாட முடியாது,மக்களை பாதுகாப்பதற்கும் மக்கள் முன்னேறிச்செல்வதற்குமான ஒரு சட்டத்தை கொண்டுவாருங்கள்,இ;ந்த சட்டத்தை கொண்டுவராதீர்கள் என்பதே எங்கள் கொள்கையாகும் என தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ANURA10
சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார் அனுரா- அனோஜனுக்கு தொடர்ந்தும் உதவி
gna11
சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கவேண்டும் - ஜனாதிபதி நியமித்த குழு பரிந்துரை
lalkantha1
குற்றமிழைத்தவர்களை தண்டியுங்கள் காவியுடையை தண்டிக்காதீர்கள் - சிலர் தங்கள் நிகழ்ச்சிநிரலுக்காக ஞானசார தேரரை பயன்படுத்துகின்றனர்- லால்காந்த
velmurugan
தமிழர் நிலங்களில் இன்னும் இராணுவம் எதற்காக?
846375662_1429388159407679_5413946223460394141_n
நாளைநீங்களும் ஒரு பயங்கரவாதியே
846728920_1132460355869875_1980492389102135561_n
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்கான விசேட குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு
Namal-750x422
எயார்பஸ்கொள்வனவு நிதி மோசடி வழக்கு விசாரணைகள் பூர்த்தி – நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை
848439274_1515610073946247_4869239988910910059_n
அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்துக்கு அவுஸ்திரேலியாவில் உணர்வுபூர்வ அஞ்சலி
image_019305f562
ஞானசார தேரரின் காவியுடை சிறைச்சாலைக்குள் முறையற்ற விதத்தில் களையப்படவில்லை- சிறைச்சாலைகள் அதிகாரி
Mahinda-1
மகிந்த தொடர்ந்தும் மருத்துவமனையில் - இதற்குமேல் தெரிவிக்க முடியாது என்கின்றார் பெரமுன உறுப்பினர்