அரசியல் ஆய்வாளரும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தின் தலைவருமான சி.அ.யோதிலிங்கத்தின் மறைவையொட்டி அவருக்கு அவுஸ்திரேலியாவில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


சிட்னி ரெக் பர்ன் சமூக மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) இந் நினைவஞ்சலி நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கலந்துகொண்டு சி.அ. யோதிலிங்கம் பற்றிய நினைவுரையை ஆற்றியிருந்தார்.
அவுஸ்திரேலியாவின் பிரபல இதய சிகிச்சை நிபுணர் வை. மன்மோகன் தலைமை தாங்கிய இந்நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். இந்நிகழ்ச்சியை அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரசும், நியூ சவுத் வேல்ஸ் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது