சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார் அனுரா- அனோஜனுக்கு தொடர்ந்தும் உதவி

அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளதை வரவேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அனோஜனுக்கும் அனோஜனின் குடும்பத்தவர்கள் மற்றும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தவர்களுக்கும் இது பெரும் நிம்மதியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த முடிவு பொறுமை நிதானத்துடனான இராஜதந்திரத்தின் பெறுமதியை வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது நட்புநாடொன்றின் சட்டநடவடிக்கைகளை மதித்தல்,மிகவும் குழப்பகரமான சட்டபோராட்டங்களின்போது இலங்கை பிரஜைக்கு ஆதரவாக நின்றவர்களின் தளர்ச்சியற்ற முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனோஜன் விவகாரத்தில் சவுதிஅரேபியா வழங்கிய ஒத்துழைப்பிற்காக அந்த நாட்டிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ள அவர் சவுதி இலங்கை இராஜதந்திரிகள் அரசசேவை அதிகாரிகள் சட்டத்துறையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அனோஜன் தொடர்பில் உள்ள சட்டநடவடிக்கைகள் முற்றாக முடிவிற்கு வரும்வரை அவரது குடும்பத்திற்கு அவசியமான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன
MediaFile_20261015_120159_758
ஜனாதிபதி செயலகத்தின் அருகில் தற்காலிக கூடாரத்தை அமைத்து தங்கியியுள்ள பௌத்தமதகுருமார்
Screenshot_20261015_192923_YouTube
பேச்சுவார்த்தை தோல்வி- ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகிச்செல்வதற்கு பௌத்த மதகுருமார் மறுப்பு
கால்நடை உற்பத்தியை அதிகரித்து, பாலையும் இறைச்சியையும் பெறுமதிசேர் பொருட்களாக வடக்கிலேயே தயாரிக்க ஒத்துழைப்பு தேவை – ஆளுநர்
un human right off
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை நீக்கவேண்டும் - சட்டமூலத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் - ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்
missing protest
வடக்கு கிழக்குமுழுவதும் இராணுவமயமாக்கல் ஆழமாக வேரூன்றியுள்ளது- போர் முடிந்து 17 வருடங்கள் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன - இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
pak school
பாக்கிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 27 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
Sonali Jain-Chandra IMF-858917
இலங்கைக்கு அடுத்தது என்ன? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்
rajeev1111
மரண தண்டனை இரத்து நம்பிக்கையளிக்கின்றது -அனோஜன் விடுதலையாகி பாதுகாப்பாக குடும்பத்தினருடன் இணையும் தருணத்தையே உண்மையான வெற்றியாக கருத முடியும்- ராஜ்குமார் ரஜீவ்காந்