இலங்கைக்கு அடுத்தது என்ன? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்

இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் 2027 இல் முடிவடைந்த பின்னரும்; இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க தயாராகயிருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடன் இலங்கை முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி பணிப்பாளர் சொனாலி ஜெயின் சந்திர மேலும் தெரிவித்துள்ளதாவது
எதிர்காலத்தில் இலங்கை எந்த வித உதவிகள் பொருத்தமானது என கருதுகின்றதோ அதற்கு உதவுவதற்குடி சர்வதேச நாணயநிதியம் தயாராக உள்ளது.
இலங்கையுடனான எதிர்கால ஈடுபாடுகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதை இலங்கை அதிகாரிகளே தீர்மானிக்கவேண்டும்,புதிய நிதி ஏற்பாடு முதல் கொள்கை ஆலோசனைகள், கண்காணிப்பு ஆதரவு உட்பட பல தெரிவுகள் உள்ளன.
எதிர்கால கூட்டாண்மை குறித்த பேச்சுவார்த்தைகள் உரிய நேரத்தில் இடம்பெறும், இலங்கைக்கு எந்த வடிவிலான ஆதரவை சர்வதேச நாணயநிதியம் வழங்கினாலும் எதிர்காலத்தில் அது இலங்கைகக்கான அர்ப்பணிப்புள்ள பங்காளியாக தொடர்ந்தும் விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் இன்னமும் பல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டியுள்ளது,இலங்கை தற்போதைய பொருளாதார சீhதிருத்தங்களை முன்னெடுப்பது குறித்தும் நுண்பொருளாதார ஸ்திரதன்மை குறித்து கவனம் செலுத்துவது அவசியம் .
பொருளாதார சீர்திருத்த காலத்தில் அரச வருமானம் இரண்டுமடங்காகியுள்ளதால் நிதி செயற்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது பெருமளவிற்கு பூர்த்தியாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன
MediaFile_20261015_120159_758
ஜனாதிபதி செயலகத்தின் அருகில் தற்காலிக கூடாரத்தை அமைத்து தங்கியியுள்ள பௌத்தமதகுருமார்
Screenshot_20261015_192923_YouTube
பேச்சுவார்த்தை தோல்வி- ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகிச்செல்வதற்கு பௌத்த மதகுருமார் மறுப்பு
கால்நடை உற்பத்தியை அதிகரித்து, பாலையும் இறைச்சியையும் பெறுமதிசேர் பொருட்களாக வடக்கிலேயே தயாரிக்க ஒத்துழைப்பு தேவை – ஆளுநர்
un human right off
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை நீக்கவேண்டும் - சட்டமூலத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் - ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்
missing protest
வடக்கு கிழக்குமுழுவதும் இராணுவமயமாக்கல் ஆழமாக வேரூன்றியுள்ளது- போர் முடிந்து 17 வருடங்கள் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன - இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
pak school
பாக்கிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 27 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
rajeev1111
மரண தண்டனை இரத்து நம்பிக்கையளிக்கின்றது -அனோஜன் விடுதலையாகி பாதுகாப்பாக குடும்பத்தினருடன் இணையும் தருணத்தையே உண்மையான வெற்றியாக கருத முடியும்- ராஜ்குமார் ரஜீவ்காந்
Dayan-Jayatilleka
மாகாணசபைதேர்தல்கள் குறித்து அரசாங்கத்திற்கு அக்கறையில்லை – அரசாங்கம் தேர்தலை நடத்தாது- தயான் ஜயதிலக