ஞானசார தேரரை விடுதலை செய்யவேண்டும் என கோரி கொழும்பிற்கு கண்டியிலிருந்து பாதயாத்திரையாக வந்த பௌத்தமதகுருமார் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடான பேச்சுவார்த்தைகளில் திருப்தியடையாததை தொடர்ந்து காலிவீதியில் தற்காலிககூடாரமொன்றை அமைக்க முயற்சி செய்துள்ளனர்.
பொலிஸார் அதனை அகற்றுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் அதனை காலி வீதியின் ஒருபக்கத்தில் அமைத்துள்ளனர்.
ஞானசாரதேரரின் விடுதலை தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கும்வரை அங்கிருந்து அகலப்போவதில்லை என தெரிவித்துள்ள பௌத்தமதகுருமார் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.