அரசாங்கம் தனக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு மாறாக ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்காது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
லால்காந்த மேலும் தெரிவித்துள்ளதாவது
அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறி சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதியோ அரசாங்கமோ எடுக்கப்போவதில்லை.
சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையை ஏற்படுத்துவதுமே அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணை.
ஜனாதிபதி அந்த ஆணைக்கு மாறாக எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்.
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்தமதகுருமாரின் சிறிய குழுவினர் விடுக்கும் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது அது அரசாங்கத்தின் ஆணையை மீறுவதாக அமையும்.
நாங்கள் எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்படமாட்டோம்,ஜனாதிபதியும் அந்த ஆணையை மீறி செயற்படமாட்டார் என நான் உறுதியாக நம்புகின்றேன். என லால்காந்த தெரிவித்துள்ளார்.