கவந்திஸ யானையின் உயிரிழப்பு குறித்து சுயாதீன வெளிப்படையான விசாரணையொன்று அவசியம் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த விசாரணைக்கு வெளிநாட்டு நிபுணர்களையும் உள்வாங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
சியாம்பலாங்கமுவவிற்கு சென்று யானைக்கு இறுதிமரியாதையை செலுத்திய சஜித்பிரேமதாச யானை எவ்வாறான சூழ்நிலையில் உயிரிழந்தது என்பதை கண்டறிய முழுமையான விசாரணை அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
பலவருடங்களுக்கு முன்னர் யானைக்கு கவந்திஸ்ஸ என்ற பெயரை சூட்டியவன் நான் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அற்புதமான காட்டுயானைகளி;ல் ஒன்று கவிந்திஸ்ஸஎன தெரிவித்துள்ள அவர் யானைகளை பாதுகாப்பதற்கான செயலணியொன்றை நிறுவவேண்டும் கடந்த காலங்களில் இதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதிலும் அது நிறைவேறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
யானை மனித மோதல்களுக்கு முழுமையான தேசிய திட்டம் அவசியம்,சர்வதேச உதவியுடன் யானைகள் மற்றும் ஏனைய கால்நடைகளுக்கான மருத்துவமனையொன்றை நிறுவவேண்டும்,இலங்கையின் இளம் தலைமுறையை உள்வாங்கிய யானை பாதுகாப்பு முயற்சியொன்றை முன்னெடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யானைமனித மோதலால் பாதிக்கப்படும் விவசாயிகளை சமூகங்களை பாதுகாக்கவேண்டியது அவசியம் ஆனால் யானைகளை சுடுமாறு அதிகாரிகள் அவர்களை ஊக்குவிக்ககூடாது எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.