மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல்தரையை மீட்டெடுக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
📅 திகதி: 25/10/2026 ஞாயிற்றுக்கிழமை
🕝 நேரம்: மாலை 2.30 மணி
📍 இடம்: மாநகரசபை மண்டபம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல்தரைப் பிரச்சினை என்பது கால்நடைகளையும் கால்நடைப் பண்ணையாளர்களையும் மட்டும் சார்ந்த பிரச்சினையல்ல; அது அவர்களின் வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கியமான பிரச்சினையாகும்.
எனவே, மேய்ச்சல்தரையை மீட்டெடுப்பதற்கும், கால்நடைகள் மற்றும் பண்ணையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அனைவரும் தவறாது கலந்துகொண்டு, எமது உரிமைகளுக்கான போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்துக்களையும் செயற்பாட்டுத் திட்டங்களையும் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஒன்றுபடுவோம்! உரிமைகளை வென்றெடுப்போம்!
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல்தரையை மீட்டெடுப்போம்!
அன்புடன்,
கிழக்குமாகாண சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்