இலங்கையின் பொருளாதாரம் குறித்த நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளிற்கு பதிலளிப்பது தாமதமானால் மத்திய வங்கியின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தோன்றி பதிலளிக்க தயார் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் முன்னிலையில் மத்திய வங்கியின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்ட வேளை மத்திய வங்கி ஆளுநர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா பொருளாதாரம் பணவீக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளிற்கு உரிய பதில் கிடைப்பதில்லை என தெரிவித்தார்.
ஆளுநரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பணவியல் கொள்கை குறித்து – உதாரணமாக பணவீக்கம் அல்லது மாற்று விகிதம் குறித்து – நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது பொதுவாக எந்த பதிலும் வழங்கப்படுவதில்லை. ஏன்? நாடாளுமன்றத்தில் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் இல்லாததால் இது நடந்ததாகத் தெரிகிறதுஎன ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய ஆளுநர்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு கேள்வியை எழுப்பும்போது அது நேரடியாக நிதி அமைச்சரிடம் அனுப்பப்படும். அந்த நிலையில் அமைச்சு
சில நேரங்களில் கருத்துக்காக எங்களைத் தொடர்பு கொள்கிறது. உதாரணமாக நாளை பதில் வர வேண்டியிருந்தால் இன்றுதான் அந்தக் கேள்வி நமக்குக் கிடைக்கும். அப்படியிருந்தும் நிதி அமைச்சருக்குத் தேவையான பதிலைத் தயாரித்து அனுப்ப நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அதுதான் நடைமுறை.
நிதியமைச்சர் மூலம் மத்திய வங்கியால் பெறப்படும் அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் சரியான நேரத்தில் பதில்களை வழங்குகிறோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இருப்பினும் ஒட்டுமொத்த செயல்முறை எப்போதும் திட்டமிட்டபடி நகராது. சில கேள்விகள் மத்திய வங்கியுடன் மட்டுப்படுத்தப்படவில்லை; அவை நிதி அமைச்சகம் போன்ற பிற நிறுவனங்களையும் உள்ளடக்கியது. நிதியமைச்சர் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் பதில்களையும் ஒரே அறிக்கையாக தொகுத்துஇ அதை தொடர்புடைய அமைச்சரிடம் சமர்ப்பிக்கிறார்.
எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நேரடியாக பதில்களை வழங்க நாடாளுமன்றத்தின் முன் ஆஜராவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.என குறிப்பிட்டார்