வடக்குமாகாண தொழில்நுட்ப சேவை வேலைவாய்ப்பு

வடக்குமாகாண தொழில்நுட்ப சேவை வேலைவாய்ப்பு-ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் தரம்
III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026

 

அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் அவர்களின் CP/DEC/25ம் இலக்க 2025.07.16ம்
திகதிய கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ள 2025.07.07ம் திகதிய அமைச்சரவைக் கூட்ட
தீர்மானத்தின் பிரகாரம், வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரின்
NP/05/01/RI/APP/2025 இலக்க 2025.07.23ம் திகதிய கோரிக்கைகளுக்கமைவாக வடக்கு
மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் தரம் III இல்
காணப்படும் மூன்று (03) பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்
பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால்
2026 மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது. )
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026.03.03 ஆகும்.
01. ஆட்சேர்ப்பிற்கான சேவை நிபந்தனைகள் :-

2018.01.01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுப்பெறும் வகையில் வடக்கு மாகாண கௌரவ
ஆளுநர் அவர்களால் அனுமதிக்கப்பட்ட ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் சேவையின்
சேவைப்பிரமாணக் குறிப்பு மற்றும் அதன் திருத்தங்களில் விதந்துரைக்கப்பட்ட
நிபந்தனைகளுக்கு அமையவும், பதவியுடன் தொடர்புடைய சட்டங்கள்,
தாபனவிதிக்கோவை ஏற்பாடுகள், நிதிப்பிரமாணங்கள் மற்றும் இலங்கை சனநாயக
சோசலிசக் குடியரசின் 1817/30ஆம் இலக்க 2013.07.03ஆம் திகதிய அதிவிசேட
வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன
நடைமுறை ஒழுங்கு விதிக்கோவை ஆகியவற்றிற்கு உட்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட
விண்ணப்பதாரிகள் குறித்த பதவியின் தரம் III இற்கு நியமிக்கப்படுவர்.

திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பரீட்சார்த்திகள்
நியமனத் திகதியிலிருந்து மூன்று வருடங்களிற்கு தகுதிகாண் அடிப்படையில் தரம் IIIT
பதவிக்கு நியமிக்கப்படுவர். இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வூதிய உரித்துடையதுமாகும்.
சேவைப் பிரமாணக்குறிப்பில் குறிப்பிடப்பட்டவாறு ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் தரம் |
III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட திகதியிலிருந்து 03 வருட காலத்திற்குள் முதலாவது
வினைத்திறமை காண் தடைப்பரீட்சையில் சித்தியெய்துதல் வேண்டும்.
01.3. இச் சேவை இடமாற்றத்திற்குட்பட்ட சேவையாகும். இதனால் இந் நியமனம் பெறுபவர்கள்.
வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் சேவையாற்ற வேண்டுமென்ற நிபந்தனைக்கும்
கீழ்ப்படிதல் வேண்டும்.
01.4. அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 18/2020 மற்றும் இது தொடர்பாக தொடர்ந்து வரும்.
சுற்றறிக்கைகள் என்பவற்றுக்கமைய நியமனத் திகதியிலிருந்து மூன்று (03) வருடங்கள்
முடிவதற்கு முன்னர் குறித்துரைக்கப்பட்ட இரண்டாவது அரச கரும மொழியில் தேர்ச்சி
பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

 

திறந்த போட்டிப்பரீட்சை மூலம் நியமிக்கப்படவுள்ள ஆட்களின் மொத்த எண்ணிக்கை 03
ஆகும். நியமனங்களின் எண்ணிக்கை மற்றும் நியமனம் அமுலுக்கு வரும் திகதி என்பன
நியமன அதிகாரியினால் வரையறுக்கப்படும். அறிவிக்கப்பட்ட இவ் வெற்றிடங்கள்
தொடர்பில் பகுதியளவு வெற்றிடங்கள் அல்லது சகல வெற்றிடங்களையும் நிரப்பாது
விடுவதற்கான அதிகாரத்தினை நியமன அதிகாரி கொண்டுள்ளார்.
02. சம்பள அளவுத்திட்டம் :-
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025க்கு அமைவான, சம்பளத் தொகுதி MN 3 – 2025 க்கு
ஏற்ப ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் சேவையின் தரம் – III இற்கான திரட்டிய சம்பள
அளவுத் திட்டமானது ரூபா 52,250 – 10 x 800 – 11 x 1,190 – 10 x 1,320 – 10 x 1,350 – 100,040/-
ஆகும். (இவ் அளவுத்திட்டத்தின் நான்காவது படிநிலையை அடைய முன் முதலாவது |
வினைத்திறமைகாண் தடைப் பரீட்சையில் சித்திபெறல் வேண்டும்) எவ்வாறாயினும் மேற்படி
சுற்றறிக்கையின் அட்டவணை II இல் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக |
விதித்துரைக்கப்பட்ட சம்பளம் இப்பதவியின் பொருட்டு வழங்கப்படும்.
03. பொதுவான தகைமைகள் :-
3.1 விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
3.2
3.3
விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராக இருத்தல்
வேண்டும். இவ் விண்ணப்ப முடிவுத் திகதிக்கு உடன் முன்னர் உள்ள ஆறு (06) ஆண்டு
காலப்பகுதியில் ஆகக் குறைந்தது மூன்று (03) ஆண்டுகளாயினும் வடக்கு
மாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்திருத்தல் வேண்டும்.
அல்லது
விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக்
கொண்டிருப்பதுடன் ஆகக்குறைந்தது ஐந்து (05) வருடங்கள் வடக்கு மாகாணத்தில்
தொடர்ச்சியாக வசித்திருத்தல் வேண்டும்.
(*நேர்முகப் பரீட்சையின் போது தமது தேருநர் இடாப்பின் உறுதிப்படுத்தப்பட்ட
பிரித்தெடுப்பிதழை சமர்ப்பித்தல் வேண்டும்)
விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் கடமையாற்றக் கூடிய சிறந்த
தேகாரோக்கியம் உள்ளவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் சிறந்த நன்னடத்தையும்
உள்ளவராக இருத்தல் வேண்டும்.
3.4 விண்ணப்பதாரி விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று அல்லது அதற்கு முன்னர்
இப்பதவிக்காக கோரப்பட்ட சகல தகைமைகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.
3.5 விண்ணப்பதாரி விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு
குறையாதவராகவும், 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Page 2 of 7
04. கல்வித் தகைமைகள் மற்றும் தொழிற் தகைமைகள் –
கல்வித் தகைமைகள்
க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ் / சிங்களம் / ஆங்கிலம் மற்றும் கணிதம்,
விஞ்ஞானம் என்பவற்றுடன், மேலும் ஒரு பாடம் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில்
திறமைச் சித்திகளுடன் (Credit) ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
க.பொ.த (உ/த)ப் பரீட்சையில் கணித / விஞ்ஞானப் பாடத்துறைகளில் இராசயனவியல் அல்லது
பௌதீகவியல் உள்ளடங்கலாக பொதுப்பரீட்சை தவிர்ந்த மூன்று (03) பாடங்களில் ஒரே
அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
அத்துடன்
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக்
கல்லூரியில் துறையுடன் தொடர்புடைய தேசிய தொழிற் தகைமை மட்டம் – 06 (NVQ Level –
06) இல் உயர் தேசிய தொழில்நுட்பவியல் டிப்ளோமாவினை விண்ணப்பதாரி பூர்த்தி|
செய்திருத்தல் வேண்டும். அ
05. ஆட்சேர்ப்பு முறை :-
05.1 இவ்விண்ணப்ப முடிவுத் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கோரப்பட்டுள்ள சகல
தகைமைகளையும் விண்ணப்பதாரி கொண்டிருத்தல் வேண்டுமென்பதுடன். பெறுபேறுகளை
எதிர்பார்த்துச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முன்னறிவித்தல் எவையுமின்றி
நிராகரிக்கப்படும்.
05.2 மேற்படி தகைமையடைந்துள்ள விண்ணப்பதாரிகளிலிருந்து, எழுத்துப்பரீட்சையில்
தகைமைபெறும் பரீட்சார்த்திகள் பெற்ற மொத்தப்புள்ளிகளின் உயர் புள்ளி ஒழுங்கு
வரிசையில் (Merit Order) நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நியமனத்தின்
பொருட்டான தகைமைகள், ஆவணங்கள் யாவும் நேர்முகப் பரீட்சையின்போது
பரிசீலிக்கப்படும். தேவையான தகைமைகள் இல்லையெனத் தெரிய வந்தால் இப்
பதவிக்கான உரிமைகள் இரத்துச் செய்யப்படும். நேர்முகப் பரீட்சையின் போது புள்ளிகள்
எதுவும் வழங்கப்படமாட்டாது.
06. பரீட்சைக் கட்டணம் :-
விண்ணப்பதாரி, பரீட்சைக் கட்டணம் ரூபா. 500/- ஐ “செயலாளர், மாகாண பொதுச்சேவை
ஆணைக்குழு, வடக்கு மாகாணம்” என்ற பெயருக்குக் கிடைக்கக்கூடியவாறாக வடக்கு
மாகாணத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகமொன்றில் செலுத்தி, அதற்கான
பற்றுச்சீட்டினை விண்ணப்பப் படிவத்தில் உரிய கூட்டினுள் கழராதவாறு ஒட்டி அனுப்புதல்
வேண்டும். எக்காரணம் கொண்டும் இக்கட்டணம் மீளச் செலுத்தப்படமாட்டாது. இக்
கட்டணத்தை வேறு ஏதும் பரீட்சைக்கு மாற்றவும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
Page 3 of 7
07. விண்ணப்பிக்கும் முறை :-
7.1 இவ்வறிவித்தலுடன் வெளியிடப்படும் விண்ணப்பப் படிவத்தினை www.np.gov.lk என்ற
வடக்குமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று தரவிறக்கம்
செய்து அதனை பூர்த்தி செய்து, விண்ணப்ப முடிவுத் திகதி அல்லது அதற்கு முன்னர்
கிடைக்கக் கூடியவாறு, “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு
மாகாணம், இல. 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்” எனும் முகவரிக்கு
பதிவுத் தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்.
7.2 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில்
“NP/07/10/01/18″ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்

விண்ணப்பப் படிவத்தின் நிழற்படப்பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளல்
பயனுள்ளதாகும். விண்ணப்பத்தின் புகைப்படப்பிரதி மற்றும் முன்னோடிப்பிரதி என்பன
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பரீட்சைக்கான அனுமதி அட்டை மாகாண பொதுச்சேவை
ஆணைக்குழுச் செயலாளர் அவர்களினால் அனுப்பி வைக்கப்படும். பரீட்சைக்கான
அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படுவதானது விண்ணப்பதாரி சகல தகைமைகளையும்
கொண்டுள்ளார் எனக் கருதப்படலாகாது.
பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளினது விண்ணப்பப் படிவங்கள்
கிடைத்தமை தொடர்பில் அறிவித்தல் எவையும் வழங்கப்படமாட்டாது. அத்துடன்
விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் கோரப்பட்ட தகைமைகளைப் பூர்த்தி செய்திராத
விண்ணப்பங்கள் முன்னறிவித்தல் ஏதுமின்றி நிராகரிக்கப்படலாம்

 

Lab-Technician-Application-PSC-NP-S

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்