எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி, சந்திரசேனவை 500,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்திரசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரின்சி அர்சகுலரத்னவினால் பிணை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், இன்று காலை இந்த பிணை உத்தரவை அறிவித்தார்.
கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி, சந்திரசேனவை 500,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்திரசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரின்சி அர்சகுலரத்னவினால் பிணை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், இன்று இந்த பிணை உத்தரவை அறிவித்தார்.