ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, “நாங்கள் இப்பதான் தொடங்கியுள்ளோம்” என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடனான கடந்த மாதப் பேச்சுவார்த்தைகளில் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக இருந்த முகமது காலிபாஃப் (Mohammad Ghalibaf) இது குறித்துக் கூறுகையில், “தற்போதைய நிலை நீடிப்பதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்” எனத் தெரிவித்தார்.
முக்கியமான கடல் வழிப்பாதையில் சிக்கியுள்ள சரக்குக் கப்பல்களை அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்தி வெளியேற்றும் நோக்கில், டொனால்ட் ட்ரம்பின் “புராஜெக்ட் ஃப்ரீடம்” (Project Freedom) திட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
இருப்பினும், அந்த நீரிணை தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் கூற்றுப்படி, நேற்று இராணுவ மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை நடத்தியுள்ளது.
