இந்திய எக்ஸிம் வங்கிக்கு (Exim Bank India) செய்யப்பட்ட கடன் திருப்பிச் செலுத்தல் ஒன்றின் போது எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்தே, 2.5 மில்லியன் டொலர்திருட்டுகொள்ளைகண்டறியப்பட்டதாக பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“ஆஸ்திரேலிய எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் (Australian Export Finance Ltd) நிறுவனத்திற்கான கொடுப்பனவு, கடன் வழங்கியவரிடமிருந்து விலைப்பட்டியல்கள் (Invoices) பெறப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தத் தகவல்கள் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், பொதுக் கடன் மேலாண்மை அலுவலகம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டன. அந்தப் பணம் செலுத்தப்பட்டதாகவே தெரிந்தது. இதனை அண்மையில் காலமான ரங்க ராஜபக்ச கையாண்டார்.
அதேநேரம், இந்திய எக்ஸிம் வங்கியிடம் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் பணிகளை மற்றொரு பெண் அதிகாரி கவனித்து வந்தார். அந்தப் பணப் பரிமாற்றத்தின் போது அவருக்கு வந்த சில மின்னஞ்சல் முகவரிகள் குறித்து அந்தப் பெண் அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. திறைசேரியுடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரியின் மின்னஞ்சல் முகவரி அவருக்குக் கிடைத்ததையடுத்து அவர் சந்தேகமடைந்துள்ளார். இதன் பின்னரே மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், 2.5 மில்லியன்டொலர் பணம் ஒரு மூன்றாம் தரப்பினருக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது,” என்று பிரதி அமைச்சர் கூறினார்.
விசாரணைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக திறைசேரியின் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மோசடி குறித்து ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், “இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் பல விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கடன் திருப்பிச் செலுத்தல்களும் ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்குச் சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன,” என்றும் தெரிவித்தார்.
