இந்தியப் பெருங்கடல் வல்லரசுப் போட்டிகளுக்கான களமாக மாறக்கூடாது – சீனத் தூதுவர்

இந்தியப் பெருங்கடல் வல்லரசு நாடுகளின் போட்டித் தளமாக மாறக்கூடாது எனவும், அதற்குப் பதிலாக நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் பொதுவான நலன்களுக்கான தளமாக அது அமைய வேண்டும் எனவும் இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் சி சென்ஹாங் (Qi Zhenhong) வலியுறுத்தியுள்ளார்.

“கடல் என்பது வல்லரசுப் போட்டிகளுக்கான அரங்கமாக இருக்கக்கூடாது, மாறாக பரஸ்பர நன்மை மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு பரந்த மேடையாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலையான நிலைப்பாடாகும்” என்று குறிப்பிட்ட அவர், இந்தியப் பெருங்கடல் “அமைதி, வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு கடலாக” பரிணமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இத்தகைய தொலைநோக்குப் பார்வை பிராந்திய நாடுகளின் மற்றும் பரந்த சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களைப் பிரதிபலிக்கிறது என அவர் வலியுறுத்தினார். மேலும், இதற்கு எதிரான அணுகுமுறைகள் ஆதரவைப் பெறத் தவறிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

பிராந்திய ஒத்துழைப்பு குறித்த ஒரு மன்றத்தில் உரையாற்றிய தூதுவர், பண்டைய காலத்திலிருந்தே உலகளாவிய வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களுக்கான பாதையாக இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். சீனாவுக்கும் இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் நட்புறவுப் பரிமாற்றங்களின் பாரம்பரியத்தையும் அவர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

இலங்கையானது இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளதுடன், கிழக்கு-மேற்கு கடல்சார் வழித்தடங்களில் ஒரு முக்கிய மையமாகச் செயல்படுகிறது என்று அவர் கூறினார். இந்த அமைவிடம், பிராந்தியப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் இலங்கை ஒரு தனித்துவமான மற்றும் செல்வாக்குமிக்க பங்கைப் வகிக்க இடமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இருதரப்பு உறவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த தூதுவர், இரு நாட்டுத் தலைவர்களின் மூலோபாய வழிகாட்டலின் கீழ் அண்மைய ஆண்டுகளில் சீனா-இலங்கை கடல்சார் ஒத்துழைப்பு “சிறந்த முடிவுகளை” வழங்கியுள்ளதாகக் கூறினார். துறைமுகக் கட்டுமானம், கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் (Logistics), கடல்சார் பொருளாதார நடவடிக்கை, அனர்த்தத் தடுப்பு மற்றும் தணிப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளதோடு, இது இரு நாட்டு மக்களுக்கும் நேரடியான நன்மைகளைக் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்