எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் அடக்கவிலை 720 ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், பொதுமக்களுக்கு ஒரு லீட்டர் டீசலை 392 ரூபாவிற்கு வழங்குவதற்காக அரசாங்கம் தற்போது ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபா மானியத்தை ஏற்று வருவதாக அவர் வலியுறுத்தினார்.
இதன் விளைவாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறானதொரு முறைமை நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
