ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் (SriLankan Airlines) சேவை வழங்குநர் ஒருவருக்கு 74,000 அரபு அமீரக திர்ஹம் (UAE dirhams) செலுத்தியதில் மற்றுமொரு பணப்பரிமாற்றத் தவறு ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தவறான பணப்பரிமாற்றம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்துள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
