அமெரிக்க திறைசேரியால் கருவூலத்தால்தடை பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து துபாயை தளமாகக் கொண்ட அதன் துணை நிறுவனமான ஸ்லோகல் எனேர்ஜி டிஎம்எம்சிசியின்அனைத்து வணிக நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக லாஃப்ஸ் கேஸ் அறிவித்துள்ளது.
சர்வதேச தடைகள் கடுமையானவை என்ற போதிலும் லாஃப்ஸ் தனது உள்நாட்டு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) விநியோகம் பாதிக்கப்படாது என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தது மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் (சிஎஸ்இ) அதன் பங்கு விலை முரண்பாடாக உயர்ந்தது
