அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மற்றும் முன்னுரிமை மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு – சுகாதார அமைச்சின் தரவுகள் அம்பலம்!

நாட்டின் அரச சுகாதாரக் கட்டமைப்பில் உயிர்காக்கும் அத்தியாவசிய மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவது சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

‘சுவஸ்தா’ (SWASTHA) மருந்து இருப்பு மேலாண்மை அமைப்பின் ஊடாக 2026 ஜூன் 16ஆம் திகதி வரை புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, மருத்துவ விநியோகப் பிரிவினால் (MSD) நிர்வகிக்கப்படும் மருந்து விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின்படி, மிக முக்கிய உயிர்காக்கும் 13 மருந்து வகைகளில் 2 மருந்து வகைகள் (15.38%) மருத்துவ விநியோகப் பிரிவு மட்டத்தில் முற்றாகத் தீர்ந்துபோயுள்ளன. இவ்வாறான உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடானது நோயாளர் பராமரிப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், மருத்துவ விநியோகப் பிரிவிடம் இருக்க வேண்டிய 618 முன்னுரிமை மருந்து வகைகளில் 137 மருந்துகள் (22.17%) தற்போது கையிருப்பில் இல்லை. இது ஒட்டுமொத்த முன்னுரிமை மருந்துகளில் ஐந்தில் ஒன்று தட்டுப்பாடாக உள்ளதைக் காட்டுகிறது.

இதேவேளை, மேலும் 116 முன்னுரிமை மருந்து வகைகள் இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாகவும், மற்றொரு 59 மருந்து வகைகள் ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே போதுமான கையிருப்பில் உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், மொத்தம் 175 முன்னுரிமை மருந்து வகைகள் (28.3%) வரும் மாதங்களில் முற்றாகத் தீர்ந்துபோகும் அபாயத்தில் உள்ளன.

நோயாளர்களுக்கான தடங்கலற்ற சிகிச்சையை உறுதிப்படுத்துவதற்கு, சர்வதேச தரத்திற்கு இணங்க அவசரக் காலத்திற்கான மேலதிக இருப்புக்களைப் (Buffer Stocks) பேணுவது இன்றியமையாதது என சுகாதாரத் துறை சார்ந்தோர் வலியுறுத்துகின்றனர்.

மருந்து கொள்வனவில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், டெண்டர் நடைமுறைப் பிரச்சினைகள் அல்லது விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் போன்ற இந்தத் தட்டுப்பாட்டிற்கான பின்னணிக் காரணங்களைச் சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு என்பன தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிகக் குறைந்த அளவில் இருப்பு உள்ள மருந்துகளுக்கான மாற்றுத் திட்டங்கள் என்ன? வைத்தியசாலைகளில் தற்போதே மாற்று மருந்துகள் பயன்படுத்தப்படத் தொடங்கிவிட்டனவா? போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கான தொடர்ச்சியான அணுகலை உறுதி செய்வதற்காக, நாட்டின் மருந்து விநியோகச் சங்கிலியில் வலுவான திட்டமிடல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை இந்தத் தற்போதைய நிலைமை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்