கிளிநொச்சி மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான உபகுழுக் கூட்டம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான உபகுழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் பங்குபற்றுதலுடன்  கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஜெகநாதன் விவேகானந்தன்,பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரச துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது வன்னேரிக்குளம், கிளிநொச்சிக் குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரக்கூடிய வசதிகளை உருவாக்குதல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலையான சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் மற்றும் நீர்நிலைகளை மையமாகக் கொண்டு சுற்றுலா மையங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள், படகு சவாரி, பொழுதுபோக்கு பூங்காக்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்