இலங்கையின் மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளில் தனது நிலையை மேலும் வலுப்படுத்திய ‘பிரிமா கொத்துமீ’

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்களுக்கான (Brands) எல்.எம்.டி (LMD) வாசகர் தெரிவுப் பட்டியலில், பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் (Packaged Foods – Pantry Items) பிரிவில் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு ‘பிரிமா கொத்துமீ’ (Prima KottuMee) தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த அங்கீகாரமானது, நுகர்வோர் மற்றும் குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த பிராண்ட் கொண்டுள்ள துடிப்பான அடையாளம், புதுமைப் புனைவு மற்றும் நீடித்த ஈர்ப்பு ஆகியவற்றிற்கு சான்றாக அமைந்துள்ளது.

இளைய தலைமுறையினரின் மனதைக் கவர்ந்த ஒரு பிராண்ட் என்ற ரீதியில், ‘பிரிமா கொத்துமீ’ புதிய சந்தை வாய்ப்புகளை ஆராய்ந்து, அற்புதமான சுவைகளை அறிமுகப்படுத்தி, அதன் பேக்கேஜிங் (உறை வடிவமைப்பு) முறைகளை மேம்படுத்தி, நுகர்வோருடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கித் தொடர்ந்து பரிணமித்து வருகின்றது. சர்வதேச மற்றும் உள்நாட்டில் விரும்பப்படும் பிராண்ட் தூதர்களுடன் (Brand ambassadors) இணைந்திருப்பது முதல், தற்போதைய டிரெண்டிங்கில் உள்ள கொரியன் பாணி ‘ராமென்’ (Korean-inspired ramen) தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது வரை, நுகர்வோருக்குத் தேவையான புதுமைகளையும் முக்கியத்துவத்தையும் வழங்குவதில் இந்த பிராண்ட் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

பிரிமா குழுமம் இலங்கையின் (Prima Group Sri Lanka) சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (Ceylon Agro Industries) பொது மேலாளர் சஜித் குணரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரத்தை வழங்கிய எங்களது நுகர்வோருக்கு நாங்கள் பெருமளவிலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையின் மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்படுவது ஒரு பெரிய கௌரவமாகும். எங்களது கூட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றியை எங்களால் சாதித்திருக்க முடியாது” என்றார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘எல்.எம்.டி வாசகர்களின் மிகவும் விரும்பப்படும் பிராண்டுகள்’ (LMD Reader’s Most Loved Brands) கணக்கெடுப்பானது, நுகர்வோரின் கருத்துக்கள் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் ஒரு பிராண்டின் புதுமைத்திறன், பொருளாதார வலிமை மற்றும் சந்தை ஈர்ப்பு ஆகியவற்றை அளவிடும் ஒரு புகழ்பெற்ற அங்கீகாரமாகும். இந்தத் தரவரிசைகள் முற்றிலும் நுகர்வோரால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதால், இமுடிவுகளின் நம்பகத்தன்மையும் உண்மைத்தன்மையும் உறுதி செய்யப்படுகின்றன. எல்.எம்.டி-யின் டாப் 40 (Top 40) தயாரிப்பு பிராண்டுகளின் பட்டியலில் ‘பிரிமா கொத்துமீ’ உள்வாங்கப்பட்டுள்ளமையானது, நாடு முழுவதிலும் உள்ள நூடுல்ஸ் பிரியர்களுடன் இந்த பிராண்ட் கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

rauff hakeem
இம்ரான் கான் குறித்த விவாதத்தைத் தடுத்த அரசாங்கத்தைச் சாடிய ரவூப் ஹக்கீம்; கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்த அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்தார்
Aruni Ranaraja-863242
அமெரிக்காவிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்
no psta157
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது: பாராளுமன்றக் குழுவில் ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பு வலியுறுத்தல்
Mujibur-Rahman-L
இலங்கையில் இஸ்ரேலிய செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
namal parliment
வாக்குறுதியளிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் சீன முதலீடு எங்கே? அரசாங்கத்திடம் நாமல் கேள்வி!
SAJITH X
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை- அனைத்து நாடுகளுடனும் 'நேர்மறையான கூட்டிணைவுகளை' ஏற்படுத்த சஜித் அழைப்பு!
parliment
'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்சட்டமூலம்பாராளுமன்றத்தில் பதற்றம்: பரந்த பொதுமக்கள் ஆலோசனைகளை எதிர்க்கட்சி வலியுறுத்தல்!
Yoshitha-new
ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட வாக்குமூலம்
Mullativu'''''''' hos
வைத்தியசாலைகளைப் பொறுப்பேற்கும் முயற்சியால் மீண்டும் சூடுபிடித்துள்ள 13ஆவது திருத்தம் குறித்த விவாதம்
wimal weera
அதிகாரத்தின் ஆணவம்: இருக்கும்போது அலட்சியப்படுத்தப்பட்டு, இழக்கும்போது உணரப்படும் ஒரு சலுகை- வீரவங்ச குடும்பத்தினர் வழங்கியுள்ள பாடங்கள்