வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை – அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக, அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (25.06.2026) அவ் அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
மேற்படி கலந்துரையாடியதற்கு அமைவாக பின்வரும் விபரங்களை பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் தெரியப்படுத்தியுள்ளார்.
01.வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) யூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.
02.வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அவ்வாறு கட்டணம் செலுத்துவதோ அல்லது பெற்றுக் கொள்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
03.ஏற்கனவே வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் உரியவர் தனது தேசிய அடையாள அட்டையினைக் காண்பித்து வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.
04.வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ அதாவது www.ird.gov.lk அல்லது உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
05.மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிய முடியும்.
எனவே மேற்படி விபரங்களுக்கு அமைய, பொதுமக்கள் எதுவித பீதியும் அடையத் தேவையில்லை என அரசாங்க அதிபர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு