வட மாகாணத்தில் உலக வங்கியின் ‘REVIVE’ திட்டம்: யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் குருநகர் மீன்பிடித் தொழில் அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்!**

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ‘‘Sri Lanka Regional Empowerment through Vibrant, Inclusive and Viable Economies Project – REVIVE ‘’ திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்கள் தலைமையிலான குழுவினருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளிற்கும் இடையில் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் 25.06.2026 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வட மாகாணத்தில் அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கோட்டை அபிவிருத்திக் குழுமம் (Jaffna Fort Development Cluster) மற்றும் குருநகர் மீன்பிடித் தொழில் அபிவிருத்திக் குழுமம் (Gurunagar Fisheries Development Cluster) ஆகிய இரு பிரதான அபிவிருத்திக் குழுமங்களுக்கான கருத்துரு திட்டங்கள் (Northern Provincial Conceptual Plan) அவற்றில் ஏற்படுத்தக்கூடிய முன்னேற்றங்கள், மாற்றங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ அலகின் (Project Management Unit) அதிகாரிகள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர் – யாழ்ப்பாணம், உள்ளுராட்சி ஆணையாளர், யாழ்.மாநகரசபை ஆணையாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர், தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், மீன்வளம் மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குறித்த திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்