கத்தார் எயார்வேஸ் கொழும்புக்கான வாராந்த விமான சேவைகளை 35 ஆக மீண்டும் அதிகரிப்பு

கொழும்பு: கத்தார் எயார்வேஸ் (Qatar Airways) நிறுவனம், தோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது முழுமையான விமான சேவைகளை ஜூலை 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளதுடன், தினசரி ஐந்து விமாண சேவைகளை நடத்தும் தனது கால அட்டவணையை மறுசீரமைத்து இலங்கையுடனான வான்வழி இணைப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்தச் சேவை மறுசீரமைப்பின் மூலம், இந்நிறுவனம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வாராந்தம் மொத்தம் 35 விமான சேவைகளை இயக்கவுள்ளது. இது பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், தோஹாவில் உள்ள அதன் பிரதான மையத்தின் ஊடாக தடையற்ற உலகளாவிய இணைப்புகளையும் வழங்கும்.

இந்த முழு அளவிலான விமான சேவைகளின் மீள்வருகையானது, இலங்கைக்கும் மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலுள்ள முக்கிய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறை, வணிகப் பயணங்கள் மற்றும் சரக்குக் போக்குவரத்து (Cargo movement) ஆகியவற்றை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலைய அதிகாரிகள் இந்த விமான சேவைகளின் அதிகரிப்பை வரவேற்றுள்ளதுடன், இந்த விரிவாக்கப்பட்ட கால அட்டவணையானது வான்வழி இணைப்பை மேலும் மேம்படுத்துவதோடு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடான பயணிகள் போக்குவரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து